இன்று(ஜூலை 14) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

Photo of author

By Parthipan K

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு போடப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் கடந்த மே மாதம் வரை பெட்ரோல் டீசல் விலையை மாற்றி அமைக்கவில்லை. ஆனால் ஜூன் முதல் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.63 ஆகவும்,டீசல் விலை ரூ.78.11 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.மேலும் தமிழகத்தில் இந்த மாதம் 7 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 83.63 ரூபாயாகவும் டீசல் விலை லிட்டருக்கு 77.91 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.அதன்பிறகு பெட்ரோல் விலையில் இன்றுவரை எந்த மாற்றமும் இல்லாத நிலையில் டீசல் விலை கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்து வருகிறது.

நேற்று சென்னையில் டீசல் விலை 78.11 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.மேலும் பெட்ரோல் விலை 16 ஆவது நாளாக எந்த மாற்றமும் இல்லாமல் 83.63 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.