“பீனிக்ஸ்” திரைப்படம் ரிலீஸ் தேதி திடீர் தள்ளிவைப்பு!! “கங்குவா”,”அமரன்” போட்டி போட பயமா!!

Photo of author

By Vinoth

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முதன்முதலில் ஹீரோவாக அறிமுகமான படம் “தென்மேற்கு பருவகாற்று” அந்த படம் முதல் தற்போது கடைசியாக வெளியான மாகாராஜா படம் வரை அவரது நடிப்பில் கலக்கி வருகிறார். தற்போது அவரது மகன் சூர்யா சேதுபதி “பீனிக்ஸ்” திரைப்படம் நடித்து ஓரிரு நாட்களில் வெளியாக இருந்த நிலையில் தற்போது பட குழுவினர் ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளனர்.

இவர் ஏற்கனவே தன் தந்தையுடன் சுந்துபாத், நானும் ரெளடி தான் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இப்படத்திற்காக பிரத்யேகமாக பாக்ஸிங் பயிற்சி எடுத்து நடித்திருக்கிறார் சூர்யா சேதுபதி. பீனிக்ஸ் திரைப்படம் நவம்பர் 14-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் நடைபெற்று வந்தது. இதற்கு காரணம் நாளை வெளியாகும் கங்குவா திரைப்படம் அதிகபடியான திரையாரங்குகளில் வெளியாக உள்ளது.

அது மட்டுமின்றி தற்போது அதிக திரையாரங்குகளில் வெற்றிகரமாக 2 வாரங்களாக ஓடிக்கொண்டி இருக்கும் அமரன் திரைப்படம். இதற்கு இடையில் தற்போது படம் ரிலீஸ் செய்தால் குறுகிய திரையரங்கில் மட்டும் வெளியிட முடியும் இதனால் படம் நஷ்டத்தில் போய்விடும் என பயந்து தேதியை மற்ற முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டராம் கூறுகின்றனர். மகன் நடித்த முதல் படமே தள்ளிவைக்கப்பட்டு உள்ளதால் விஜய் சேதுபதி அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.