போன் பே மற்றும் கூகுள் பே பயன்பாட்டில் மாற்றம்! அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பயனர்கள்!
தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்துமே ஒரு செல்போன்குள் அடங்கி விட்டது. எடுத்துக்கட்டாக நமக்கு எந்த பொருள் தேவைப்படுகின்றதோ அதை நாம் வீட்டில் இருந்தபடியே ஆடர் செய்து பெற்று கொள்ளலாம்.மேலும் உணவுகளை கூட ஆடர் செய்தால் வீடு தேடி வரும் வகையில் டிஜிட்டல் முறை மேம்பட்டு வருகின்றது.
மேலும் வங்கி சென்று பண பரிவர்த்தனை செய்வதில் சிரமம் ஏற்படுவதால் அதற்கென தனி செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது.அதில் முதன்மை பெற்றதாக கூகுள் பே,போன் பே தான்.ஒரு இடத்தில் இருந்து மற்றொரு பகுதியில் இருப்பவர்களுக்கு கூட குறுகிய காலத்தில் பண பரிவர்த்தனை செய்யலாம். அதற்காக நம்முடைய வங்கி கணக்கை போன் பே மற்றும் கூகுள் பே செயலியுடன் இணைக்க வேண்டும்.
நம்முடைய போன் நம்பர் இருந்தாலே போதுமானது பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.மேலும் தற்போது கொரோனா பரவலிற்கு பிறகு டீ கடை முதல் நகைக் கடை வரை பணமில்லா எண்ம பரிவர்த்தனை தொடங்கியுள்ளது.தேசிய கட்டணக் கழகத்தின் தரவுகளின்படி கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 11 லட்சம் கோடி அளவிற்கு போன்பே, ஜிபே போன்ற யுபிஐ செயலிகள் மூலம் பரிவர்த்தனை நடைபெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் என்பிசிஐ-யின் நடத்திய ஆலோசனை நடந்ததில் யுபிஐ செயலிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தப்பட உள்ளனர். ஒரு நாளொன்றுக்கு எத்தனை முறை எவ்வளவு பணம் அனுப்ப முடியும் என்ற கட்டுப்பாட்டை இந்த இறுதிக்குள் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
1. ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சமாக ரூ ஒரு லட்சம் வரை மட்டுமே பணத்தை கூகுள் பே,போன் பே பரிவர்த்தனை செய்ய முடியும்.அதிலும் குறிப்பாக கனராவங்கி போன்ற சிறய வங்கிகள் ரூ 25,000 வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும்.வங்கிகளின் கொள்கைகளை பொறுத்து பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.
2. ஒரு நாளொன்றுக்கு ஒரு நபர் அதிகபட்சமாக 20 முறைகள் மட்டுமே போன்பே,பேடிஎம் மற்றும் ஜிபே போன்ற செயலிகள் மூலம் பரிவர்த்தனை செய்யலாம். மேலும் எத்தனை முறை எவ்வளவு பண பரிவர்த்தனை செய்யலாம் என்பது அந்தந்த வங்கிகள் பொறுத்தது.மேலும் ஒரு சில செயலிகளை பொறுத்தும் வேறுபடும் என தெரிவித்துள்ளனர்.இவ்வாறான கட்டுப்பாடுகள் பயனாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.