போட்டோக்களிலிருந்து பேக்கிரவுண்டை நீக்க இதோ ஒர் எளிய வழி
ஒவ்வோருத்தருக்கும் ஒவ்வோரு விசயம் மகிழ்ச்சியை தரும், அப்படி பொதுவாக எல்லாருக்கும் மகிழ்ச்சியை தருவது போட்டோஸ் தான், அந்த வகையில் ஒருவர் எடுக்கும் போட்டோ நல்லா இருந்தாலும் அதன் பேக்கிரவுண்ட் சரி இல்லாத காரணத்தாலேயே பல சமயம் அந்த புகைப்படம் யூஸ் பண்ணமாலேயே போய்விடும்.
அப்படி குறிப்பிட்ட புகைப்படங்களில் இருந்து பேக்கிரவுண்டை (back ground) நீக்குவது எப்போதும் ஒர் சவாலான செயலாகும். அதே சமயம் பேக்கிரவுண்டை நீக்குவதற்கு செலவிடும் நேரமும் அதிகம். அதுக்கு எல்லாம் (All in All solution) ஆல் இன் ஆல் சோலுஷன் ஆக இருக்கிறது ரிமூவ்.பீ.ஜி (Remove.bg) என்ற புதிய இலவச ஆன்லைன் கருவி. இதன் மூலம் ஐந்து விநாடிகளில் புகைப்படங்களில் இருக்கும் பின்னணியை சுலபமாக அகற்ற முடிகிறது.
ஃபோட்டோஷாப் அல்லது வேறு சிக்கலான புகைப்பட எடிட்டிங் மென்பொருளை விட இந்த புதிய டூல் வேகமாக பின்னணியை நீக்கிவிடுகிறது. ஒரு புகைப்படத்தில் இருக்கும் ஒரு நபரை மையக்கருத்தாக வைத்து அதன் பின்னணியை மட்டும் இந்த டூல் நீக்குகிறது.
இக்கருவியை பயன்படுத்த நாம் செய்யவேண்டியவை , கணினியிலிருந்து ஒரு புகைப்படத்தைத் தேர்ந்தெடுத்து அதை ரிமூவ்.பீ.ஜி (Remove.bg) டூலில் பதிவேற்றவேண்டும். பின்னர் சில விநாடிகளில் முடிவுகளை நாம் பெற முடியும். Remove.bg மூலம் பின்னணி நீக்கப்பட்ட புகைப்படத்தை (பி.என்.ஜி) PNG வடிவத்தில் விரைவாக பதிவிறக்கம் செய்ய முடியும்.
இந்த இலவச ஆன்லைன் கருவி AI (செயற்கை தொழில்நுட்பம்) பயன்படுத்தி பின்னணியில் இருக்கும் புகைப்படத்திற்க்கு தேவையில்லாதவைகளை வேகமாக நீக்கிவிடுகிறது.இந்த கருவியில் இருக்கும் குறைபாடு என்னவென்றால், இந்த டூலினால் போர்ட்டிரேட் வடிவத்தில் இருக்கும் புகைப்படத்தின் பின்னணியை மட்டுமே அகற்ற முடியும்.
மேலும் தற்போதைய நிலையில் இந்த டூலினை பயன்படுத்தி 500×500 பிக்சல்கள் அளவுள்ள படங்களை மட்டுமே பதிவிறக்க முடியும்.மேலும் இக்கருவியின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்த செய்தியின் படி, விரைவில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தரமான புகைப்படங்களை பதிவிறக்கம் செய்யும்படி மாற்றப்போகிறோம் என தகவல் வெளியாகி இருந்தது.
இந்த தளத்தை பயன்படுத்திய போது அது நன்றாக வேலை செய்கிறது. ஆனால் புகைப்படத்தின் பின்னணி தெளிவாக இல்லை என்றாலோ அல்லது மிருகத்தின் புகைப்படம் இருந்தாலோ இந்த டூல் தடுமாறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .