வாடிவாசல் படத்தின் கெட்டப் இதுவா? இணையத்தில் வைரலாகும் சூர்யாவின் புகைப்படம்!!

Photo of author

By Jayachithra

நடிகர் சூர்யாவின் சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

மேலும், ஞானவேல் ராஜா இயக்கத்தில் ஜெய் பீம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் திரையரங்குகள் திறந்தவுடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் சூர்யா வாடிவாசல் திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார் மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் இது வாடிவாசல் திரைப்படத்தின் கெட்டப் இதுதான் என்று கூறிவருகின்றனர்.