ஜூலை 1 ஆம் தேதி புனித யாத்திரை தொடக்கம்!! ஸ்பாட் பதிவு ஆரம்பம்!!
அமர்நாத் யாத்திரை சென்றால் பாவங்கள் விலகும் என்றும் பலர் நம்புகிறார்கள். அமர்நாத்தில் உள்ள குகை கோவில் 5000 ஆண்டுகள் பழைமையானது என்று புராணங்களில் உள்ளது. மேலும் இந்த குகை பற்றியும், அமர்நாத் யாத்திரை பற்றியும் புரணாங்களில் பல விதமான கதைகள் உள்ளது.
இந்த கோவிலை முதன் முதலில் கண்டுபிடித்தவர் பிருகு முனிவர். மேலும் ஆண்டுதோறும் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க லச்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரைக்கு வருவது வழக்கம். இந்த குகை கோவில் 3880 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது.
மேலும் இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 01 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அமர்நாத் யாத்திரை செல்ல விரும்புவோருக்கு ஏப்ரல் 17 முதல் முன்பதிவு தொடங்கியது.
இதனை ஆன்லைன் மூலமோ அல்லது நேரடியாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த யாத்திரை 62 நாட்கள் நடைபெறவுள்ளது. மேலும் இதனை குறித்து முழு விவரங்களையும் ஜம்மு காஷ்மீர் மாநில துணை நிலை கவர்னர் அறிவித்துள்ளார்.
தற்போது அமர்நாத் யாத்திரைக்கான ஸ்பாட் பதிவுகள் தொடங்கியுள்ளது. ஜூலை 1 ஆம் தேதி யாத்திரை தொடங்க உள்ளது. இந்த நிலையில் 1,500 மேற்பட்ட யாத்ரீகர்கள் மற்றும் புனிதர்கள் ஜம்மு காஷ்மீர் சென்று உள்ளார்கள். இதன் காரணமாக மாநிலத்தில் ஸ்பாட் பதிவுக்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.