யாத்திரைக்கு சென்றவர்களின் மீது மின்சாரம் தாக்கி அப்பாவி மக்கள் 10 பேர் மரணம்!.பலர் படுகாயம்!..வெளிவந்த பகிர் திருப்பம் ?..
கூச் பெஹார் மாநிலம் மேற்கு வங்கத்திலுள்ள பிரபலமான ஜல்பேஷ் சிவன் கோவில் ஒன்றுள்ளது.இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள்.இந்த கோயிலுக்கு கூச் பெஹாரில் உள்ள ஷிடலகுச்சியில் இருந்து சுமார் 30 பக்தர்கள் குழுக்களாக ஒரு காரில் சென்றனர்.
சங்ரா பந்தாவில் உள்ள தார்லா நதிப் பாலத்தின் அருகே யாத்ரீகர்களின் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அவர்கள் சென்ற வாகனம் மீது மின்சாரம் பாய்ந்தது.இதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயம் அடைந்தனர்.
இன்செய்தியை அறிந்த காவல் துறையினர் அவர்களை மீட்டு ஜல்பைகுரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இவ்விசாரணையில் மின் கம்பியில் மின் கசிவு ஏற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என விசாரணையில் தெரிவித்தனர்.
மேலும் இந்த விசாரணை தீவிரமானது இதை மாதபங்கா கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அமித் வர்மா தெரிவித்ததாவது,காரிலிருந்த ஜெனரேட்டரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தான் இந்த சம்பவம் நடந்திருக்கும் என தெரிவித்தார். பின்னர் மயக்கமடைந்த அனைவரையும் சங்ரா பந்தா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது 10 பேர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள்.
மேலும் இந்த காரை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.இந்த விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் விபத்தை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.இந்நிலையில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவிலுக்கு சென்றவர் பிணமாக வீடு திரும்பும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.