மீன் சாப்பிட்ட பாவத்திற்கு உயிரை விட்ட பிஞ்சு குழந்தைகள்! சோதனை மேற்கொண்ட பணியாளர்கள்!
வேலூர் கஸ்பா பஜார் பகுதியை சேர்ந்தவர் அன்சர். இவருக்கு சுரையா என்ற மனைவியும் ஆப்ரின் மற்றும் அசன் என்ற குழந்தைகளும் உள்ளது. அந்த குழந்தைகளுக்கு 4 மற்றும் மூன்று வயதே ஆகிறது. இவர் ஒரு ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். கடந்த 7ஆம் தேதி இரவு பணி முடிந்து வீட்டிற்கு வரும்போது ஒரு கடையில் இருந்து பொறித்த மீன்களை வாங்கி வந்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து உள்ளார்.
அந்த மீனை சாப்பிட்டுவிட்டு குழந்தைகள் இருவரும் முட்டையும் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இரவு 11 மணி அளவில் இருவருக்கும் வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த தந்தையோ மறுநாள் காலை மருத்துவமனை அழைத்து செல்லாமல் அந்த குழந்தைகளை தர்காவிற்கு அழைத்து சென்று தாயத்து கட்டி விட்டு, அதற்குப் பிறகு மருத்துவர்களின் பரிந்துரை இன்றி அங்கிருந்த மஹி என்ற ஒரு மருந்தகத்தில் இருந்து மாத்திரையும், டானிக்கும் வாங்கி வந்து குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார்.
ஆனால் இதில் பரிதாபம் என்னவென்றால் அந்த மாத்திரை மற்றும் மருந்தை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே குழந்தைகள் இருவரும் மயங்கி சுயநினைவை இழந்து விட்டனர். அதன் பிறகு அந்த தந்தை குழந்தைகளை வேலூர் பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதைக்கேட்ட அவர்களது தாய் பாசத்தினால் பரிதவிக்கும் காட்சிகள் அங்கிருந்தவர்களை மிகவும் கண்கலங்க செய்தது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் குழந்தை இறந்ததற்கான முழு காரணமும் தெரியவரும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அந்தப் பகுதிகளில் வீடு வீடாக குடி நீர் மாதிரிகளை எடுத்து சுகாதார பணியாளர்கள் சோதனை செய்து வருகின்றனர்.
தற்போதுள்ள கால கட்டத்தில் என்னவோ நோய்கள் குழந்தைகளை தாக்கி வருகின்றது. அதற்கு மருத்துவரிடம் செல்லாமல் யாரவது இப்படி செய்வார்காளா? இதற்கு காரணமே என்னவென்று தெரியவில்லை. இதை யாரிடம் போய் முறையிட முடியும்.