அரசு ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி சூடு! 14 பேர் பரிதாப பலி!

0
262
Government supporters fired on! 14 killed in tragedy
Government supporters fired on! 14 killed in tragedy

அரசு ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி சூடு! 14 பேர் பரிதாப பலி!

மேற்கு ஆப்பிரிக்கா பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றுதான் பர்கினோ பாசோ. அந்த பகுதிகளில் உள்ள நைஜீரியா, மாலி போன்ற நாடுகளில் எல்லைகளாக கொண்டுள்ள இந்நாட்டில் அல்கொய்தா, ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் மிகவும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்த பயங்கரவாத அமைப்புகள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதனால் பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினருக்கு உதவி புரியும் வகையில் அரசு ஆதரவாளர்களும் ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் அங்கு தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அந்நாட்டின் லோரோவும் மாகாணம் டிடவோ நகரில் அரசு ஆதரவு கிளர்ச்சியாளர்களின் குழுக்கள் மீது பயங்கரவாத நபர்கள் துப்பாக்கிச்சூடு ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் அரசு ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி செய்திருக்கலாம் என்று அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleமீன் சாப்பிட்ட பாவத்திற்கு உயிரை விட்ட பிஞ்சு குழந்தைகள்! சோதனை மேற்கொண்ட பணியாளர்கள்!
Next articleதலைமை செயலகத்தில் இருந்து வெளிவந்த திடீர் அறிவிப்பு! ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு இதுவே கடைசி நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here