மீனம் ராசி – இன்றைய ராசிபலன் !! உங்களுக்கு மேன்மைகள் கூடும் நாள்!

0
234
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!

மீனம் ராசி – இன்றைய ராசிபலன் !! உங்களுக்கு மேன்மைகள் கூடும் நாள்!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மேன்மைகள் கூடும் நாள். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களை புரிந்து கொண்டு நடப்பார்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த வேலைகள் உங்களுக்கு அனுகூலமாக வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும்.

அரசியல் இருக்கும் அன்பர்கள் குதூகலமாக காணப்படுவார்கள். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி கிடைப்பது மட்டுமல்லாமல் ஒரு வருமானம் வருவதற்கு வழிவகை உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழப்பம் இன்றி செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை அதிகரிக்கும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகிய ஆனந்தமாக இருப்பார்கள். வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி கண்டிப்பாக கிடைக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.

Previous articleகும்பம் ராசி – இன்றைய ராசிபலன் !! செலவுகள் அதிகரிக்கும் நாள்!
Next article34 ஆயிரம் ரூபாய் அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு!