மீனம் – இன்றைய ராசிபலன்! மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!
மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கலகலப்பிற்கு குறைவில்லாத நாள். இது மிக அற்புதமாக உள்ளது. லாப ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் எடுத்த காரியங்கள் அனைத்தும் லாபகரமாக முடியும்.
கணவன் மனைவியிடையே அருமையான ஒற்றுமை உள்ளதால் சந்தோஷமாக காணப்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அருமையாக பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும்.
உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரம் லாபகரமாகவும் மேன்மைகரமாகவும் செல்லும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். கொடுக்கல் வாங்கல்கள் அதி அற்புதமான பாதையில் செல்லும்.
உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு வருமான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைவதால் கணவன் வீட்டாரை திருப்திப்படுத்தி மகிழ்வார்கள்.
நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதுமனை புது வீடு வாங்கி மகிழும் வாய்ப்புகள் சிலருக்கு கிடைக்கும். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் அதிகரிக்கலாம். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக நடைப்பயில்வார்கள்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் இன்றைக்கு உங்களுக்கு அதி அற்புதமான நாளாக அமையும்.