மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! புத்துணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

0
148
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!

மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! புத்துணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

மீன ராசி அன்பர்கள் ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கும் என்றால் புத்துணர்ச்சி அதிகரிக்கும் நாள். இன்னைக்கு அதிகாலையில்  உங்களுக்கு எல்லா வெற்றிகளும் புதிய அனுபவங்களும் வந்து சேரும். நிதி எதிர்பார்த்தபடி கிடைக்கும். கணவன் மனைவியிடைய ஒற்றுமை சிறப்பாக அமையும். குடும்ப உறுப்பினர்கள் பக்க பலமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பரிதமாகும். கொடுக்கல் வாங்கல் மிகச் சிறப்பான பாதையில் செல்லும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மனதில் இருந்த வந்த கவலைகள் நீங்கி தைரியமாக செயல்படுவார்கள். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைந்து கணவன் வீட்டாரை மகிழ வைப்பதோடு நின்று விடாமல் விடா முயற்சியுடன் இருப்பார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மூலம் அனுகூலமான சூழ்நிலை அமையும். அரசியல்வாதிகள் முக்கிய பிரபலங்களாக உருவெடுப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து குவியும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல்நிலை சீராகி ஆனந்தமாக இருப்பார்கள்.இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடையை அணிந்து சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதக்காளியை இந்த முறையில் பயன்படுத்தி பாருங்கள்!! பொலிவிலுந்த முகம் பளபளக்க!!
Next articleபள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!