மீனம் – இன்றைய ராசிபலன்! அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள்!!

0
267
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!

மீனம் – இன்றைய ராசிபலன்! அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள்!!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள். குடும்ப உறவு சிறு சிறு பிரச்சனைகள் வரும் என்பதால் அமைதியாக செயல்பட்டால் நன்மை கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை ஓரளவிற்கு சிறப்பாக இருக்கும்.

 

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் நீங்கள் எதிர் பார்க்கும் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நிறைவேறும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் முக்கிய புள்ளிகளாக மாறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வீண் அழைச்சல் உண்டாகும்.

 

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

 

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இருந்து வந்த மந்த நிலை அகழும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கரை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பார்கள்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகும்பம் – இன்றைய ராசிபலன்! பொருளாதார நிலை உயரும் நாள்!!
Next articleஇவர்களுக்கு இன்றுடன் ஒப்பந்தம் முடிவடைகின்றது! பணி நீட்டிப்பு கிடையாது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here