மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் மனம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

0
195
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!

மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் மனம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் மனம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பஞ்சமஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் எந்த ஒரு வேலையும் பொறுமையுடன் செயல்பட்டிருக்கும் என்றால் வெற்றிகள் கண்டிப்பாக கிடைக்கும்.

குடும்ப உறவினர்கள் பாசத்துடன் செயல்படுவார்கள். கணவன் மனைவி இடையே அருமையான ஒற்றுமை குழந்தைகள் மூலம் கிடைக்கும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக அமையும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அருமையான சூழ்நிலை வந்து அமையும். மூத்த வயதில் உள்ள நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு ஆன்மீக விஷயங்களில் நாட்டம் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைந்து மணமகிழ்ச்சி உண்டாக்கும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் கொண்டாட்டத்துடன் செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழந்தைகள் மனம் சில நன்மைகளை கிடைக்க பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! உற்சாகம் அதிகரிக்கும் நாள்!
Next articleகனமழை எதிரொலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here