மீனம் – இன்றைய ராசிபலன்!! கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும் நாள்!!

Photo of author

By Selvarani

மீனம் – இன்றைய ராசிபலன்!! கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும் நாள்!!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் சில நேரங்களில் சில குழப்பங்கள் வந்து சேரலாம். இருப்பினும் மாலைக்குப்பின் அது சரியாகும். நிதி உங்கள் கட்டுக்குள் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் மீது பாச மழை பொழிவீர்கள்.

 

உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபாரம் லாபகரமாகவும் மேன்மைகரமாகவும் செல்லும். கொடுக்கல் வாங்கல்கள் அருமையான பாதையில் அமைதியாக இருக்கும்.

 

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு கணவன் விட்டாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

 

நண்பர்கள் உறவினர்கள் வகையில் செலவுகள் உண்டு. உடன் பிறந்த சகோதர சகோதரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக ஆனந்தமாக காணப்படுவார்கள்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.