பள்ளிகளுக்கு தொடர்ந்து 2 வாரம் விடுமுறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

0
75
2-consecutive-weeks-off-for-schools-action-order-issued-by-the-government
2-consecutive-weeks-off-for-schools-action-order-issued-by-the-government

பள்ளிகளுக்கு தொடர்ந்து 2 வாரம் விடுமுறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

கடந்த இரண்டு வாரங்களாகவே அனைத்து இடங்களிலும் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகின்றது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.மேலும் பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தனர்.தற்போது தான் மழை குறைந்து பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது.ஆனால் கடந்த இரண்டு நாட்களாக கடும் பனி பொழிவு காணப்படுகின்றது.

மேலும் நேற்று முன்தினம் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் அறிவிப்பில் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு பனி பொழிந்து வருகின்றது.அதன் காரணமாக வாகன ஓட்டிகள் மாற்று பள்ளிக்கு செல்பவர்கள் என அனைவரும் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

மேலும் டெல்லி, ஹிமாச்ல், உத்திரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டீகர் ஆகிய ஆறு மாநிலங்களிலும் பனிப்பொழிவு இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி பஞ்சாப் அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் டிசம்பர் 21 ஆம் தேதி முதல் ஜனவரி 21 ஆம் தேதி வரை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் காலை 8 மணிக்கு பதிலாக 10 மணிக்கு தொடங்கும்.ஆனால் பள்ளி முடியும் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை என அறிவித்தனர்.

இந்நிலையில் டெல்லியிலும் தற்போது குளிர்காலம் நிலவி வருகின்றது.அதிகாலைபொழுதில் ஆட்கள் இருப்பது கூட தெரியாத அளவிற்கு பனி பொழிந்து வருகின்றது.அதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவியர்கள் காலையில் எழுந்து பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.அதனால் எப்பொழுதுமே இவ்வாறான கால கட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது வழக்கம் தான்.

அந்த வகையில் நடப்பாண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டெல்லி கல்வி இயக்குனரகம் நேற்று மாலை தான் வெளியிட்டது.அந்த அறிவிப்பில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை உள்ள வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு இந்த விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K