மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! காலையில் சலசலப்பு மாலையில் கலகலப்பும் நிறைந்த நாள் !

0
137
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!

மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! காலையில் சலசலப்பு மாலையில் கலகலப்பும் நிறைந்த நாள் !

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் சலசலப்பு மாலையில் கலகலப்பும் நிறைந்த நாள். ஏனென்றால் காலையில் சந்திராஷ்டமம் உள்ளது. அது மாலையில் விலகுவதால் அனுகூலமான சூழ்நிலைகள் அமையும்.

கணவன் மனைவி இடையே சிறு சிறு மனக்குழப்பங்கள் காணப்படும். குடும்ப உறவு சிறப்பாக உள்ளது ஆனாலும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வருமானம் வருவதற்கு காலம் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் வந்து சேர்வதில் கலத்தாமதம் ஆகலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் காரியங்கள் இழுபறி ஆகலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சியில் சற்று கவனமாக இருப்பது நல்லது. பேசும் வார்த்தைகளில் கவனத்துடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. ஆகையால் உணவு கட்டுப்பாட்டுடன் இருப்பது நன்று.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இருந்து வந்த சில பிரச்சனைகள் சற்று ஓய்வெடுக்கும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து முடிவு எடுப்பது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து ஹயக்ரீவரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடைபெறும். இந்த நாள் இனிமையான நாளாக உங்களுக்கு அமையும்

Previous articleமகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!
Next articleஎன் மகனுடைய புது பொண்டாட்டி இதுதான்!! உதயநிதி குறித்து ஸ்டாலினின் வெளிப்படை பேச்சு!!