மீனம் ராசி – இன்றைய ராசிபலன் !! சுபகாரிய பேச்சுக்கள் கைகூடும் நாள்!

Photo of author

By Selvarani

மீனம் ராசி – இன்றைய ராசிபலன் !! சுபகாரிய பேச்சுக்கள் கைகூடும் நாள்!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சுபகாரிய பேச்சுக்கள் கைகூடும் நாள். நிதி அற்புதமாக உள்ளது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை உன்னதமாக உள்ளதால் வெளியிடங்களுக்கு சென்று மகிழலாம். குடும்ப உறுப்பினர்களிடம் சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பீர்கள்.

உத்தியோகத்தில் முன்னேற்றம் கூடி வரும். தொழில் மற்றும் வியாபாரம் சுபிட்சகரமாக நடைபெறும். கொடுக்கல் வாங்கல்கள் அதி அற்புதமாக நடைபெறும். குடும்ப நிர்வாகத்தில் உள்ள பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். உத்தியோகம் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் அற்புதமாக செயல்படுவார்கள் .

அரசியல்வாதிகள் முக்கிய பிரபலங்களாக மாறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் கண்டிப்பாக கிடைக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வதால் மருத்துவச் செலவுகள் குறையலாம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்