மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் இருந்து வந்த குழப்பங்கள் மறையும் நாள்!

0
208
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!

மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் இருந்து வந்த குழப்பங்கள் மறையும் நாள்!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் மறையும் நாள். ஏனென்றால் உங்கள் ராசியில் இருந்து சத்தராஷ்டமம் விலகி விட்டது. எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றிகளை கொடுக்கும்.

குடும்பம் ஒற்றுமையுடன் காணப்படும். கணவன் மனைவி இடையே சிறப்பான ஒற்றுமை கண்டிப்பாக இருக்கிறது. வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் புதிய நுணுக்கத்தோடு செயல்படுவார்கள். கலைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் படிப்படியாக வெற்றி அடையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறைந்து மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இருந்து வந்த தயக்கநிலை மாறி அருமையான சூழ்நிலை அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதை கண்டு மணமகிழ்ந்து போவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு இருந்து வந்த மனக்குழப்பங்கள் குறையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் இனிமையான நாளாக அமையும்.

Previous articleகும்பம் – இன்றைய ராசிபலன்!! நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும் நாள்!
Next articleஒரு வாரம் பள்ளிக்கு விடுமுறை! வெளிவந்த திடீர் உத்தரவு!