மீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு திடீர் திருப்பங்கள் ஏற்படும் நாள்!!

0
235
#image_title

மீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு திடீர் திருப்பங்கள் ஏற்படும் நாள்!!

மீனம் ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு திடீர் திருப்பங்கள் ஏற்படும் நாள். சகாய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் சந்தோஷமான நிகழ்வுகள் அனைத்தும் நடைபெறும்.குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி ஒற்றுமை அற்புதமாக உள்ளது.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்ததை விட இரட்டிப்பாக வந்து சேரும். சிலருக்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புகள் உண்டாகும். வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் உங்களில் இல்லம் தேடி வந்து நன்மைகளை செய்வார்கள். புத்தகத்தில் தன்னம்பிக்கை அதிகரிப்பதால் எல்லா வேலைகளையும் திறம்பட செய்து முடித்து மேல் அதிகாரிகளை கவர்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தை அதன் திட்டத்துடன் செயல்படுத்தி அதன் மூலம் வெற்றிகளை பெறுவீர்கள்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் திருப்பங்களை காண்பார்கள். கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடன்பிறப்புகளின் வருவியால் சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் தைரியமான சூழ்நிலைகள் அமையும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எண்ணிய காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரியம்மன் வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani