மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வரவைக்காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும் நாள்!!

Photo of author

By Selvarani

மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வரவைக்காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும் நாள்!!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வரவைக்காட்டிலும் விரயங்கள் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு சிறப்பாக உள்ளது. திடீர் பிரயாணம் ஒன்றும் உண்டாகலாம்.

கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் வேலை பளு காரணமாக சிலருக்கு இடமாற்றம் வரலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில பயணங்களை மேற்கொள்வீர்கள்.

அரசியலில் இருக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைந்து நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வெளியூருக்கு சென்று மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழும் வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் மணமகிழ்ச்சியோடு காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலைகள் அமையும். மூத்த வயதில் உள்ள நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எதிர் பாராத ஒரு நல்ல செய்தி கண்டிப்பாக கிடைக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமை தரும் நாளாக அமையும்.