மீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு வந்து சேரும் நாள்!!
மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தன வரவு தாராளமாக வந்து சேரும் நாள். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் அருமையாக நிறைவேறி உங்கள் மனதை குளிர வைக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிப்பதால் அன்யூனியமும் கூடும். வாழ்க்கைத் துறை உறவினர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.
வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். சிலருக்கு இரு மடங்காக வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பொருளாதாரம் முன்னேற்றம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைப்பதற்கு உண்டான வழி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் லாபகரமாகச் செல்லும். உத்தியோகத்தில் நீங்கள் கொடுத்த வாக்குகளை காப்பாற்ற மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் கொடிகட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்வதால் சிலர் புதிய முதலீடுகளை புகுத்தி முன்னேறுவீர்கள். காதலர்கள் சந்தோஷமாக காணப்படுவார்கள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் வந்து சேரும்.
உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்க்கும் உதவிகள் அருமையாக வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் மகிழ்ச்சியோடு காணப்படுவார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி சிறப்பாகி அருமையான வாய்ப்பு கிடைத்த மகிழ்வார்கள்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.