மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வெளியூர் பிரயாணம் செல்லும் நாள்!!

Photo of author

By Selvarani

மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வெளியூர் பிரயாணம் செல்லும் நாள்!!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வெளியூர் பிரயாணம் செல்லும் நாள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வருமானம் எதிர்பார்க்கபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் பணியிடமாறுதல் உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக வெளியூர் பிரயாணம் ஒன்று திடீரென உருவாக்கலாம். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் திறம்பட செயலாற்றுவார்கள். அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளுக்காக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வார்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எதிர்பாராத சில செலவுகள் வந்து சேரலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கரை எடுத்துக் கொள்வார்கள். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை நாடுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிறந்து ஸ்ரீ தேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.