குளிக்க சென்ற பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்! போலீசார் வழக்கு பதிவு!

0
196
Pity what happened to the woman who went to bathe! Police registered a case!
Pity what happened to the woman who went to bathe! Police registered a case!

குளிக்க சென்ற பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்! போலீசார் வழக்கு பதிவு!

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஆளூர் அடுத்த ஸ்ரீகிருஷ்ணாபுரத்தில் வசித்து வருபவர் சசிகுமார்.இவருடைய மனைவி பிரியா என்ற ராமலெட்சுமி.இவர் நீண்ட நாட்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகின்றது.இந்நிலையில் நேற்று மதியம் ராமலெட்சுமி. அவருடைய வீட்டின் அருகில் உள்ள நெடுங்குளத்தில் குளிக்க சென்றுள்ளார்.இந்நிலையில் எதிர்பாரதவிதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

மதியம் நேரம் என்பதால் அந்த பகுதியில் அதிகளவு மக்கள் நடமாட்டம் இல்லை.ஒருசிலர் மட்டுமே இருந்துள்ளனர்.அவர்கள் விரைந்து சென்று ராமலெட்சுமியை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டார் எனவும் கூறியுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து அவருடைய கணவர் சசிகுமார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர் இரணியல் உள்ள போலீசார்ரிடம் புகார் அளித்தார்.அந்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleதிமுக கட்சியின் தலைவர் பதவி! மாலையுடன் முடியும் வேட்புமனு தாக்கல்!!
Next articleதனியார் காப்பக குழந்தைகள் உயிரிழப்பு: கழிவறை இல்லை…காப்பாளர் இல்லை…அடுத்தடுத்து வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்!!