கர்நாடகாவில் ரோடு ஷோ செல்லத் திட்டம்! அடுத்தகட்ட பரப்புரையை தொடங்கும் பிரதமர் மோடி!

Photo of author

By Savitha

கர்நாடகாவில் ரோடு ஷோ செல்லத் திட்டம்! அடுத்தகட்ட பரப்புரையை தொடங்கும் பிரதமர் மோடி!

Savitha

கர்நாடகாவில் ரோடு ஷோ செல்லத் திட்டம்.!! அடுத்தகட்ட பரப்புரையை தொடங்கும் பிரதமர் மோடி!!

கலைகட்டும் கர்நாடகத் தேர்தலில் முதல் கட்ட தேர்தல் பரப்புரையை முடித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடுத்தகட்ட தேர்தல் பரப்புரையை தொடங்கவுள்ளார்.

கர்நாடகத் தேர்தலில் முதல் கட்ட பிரச்சாரத்தை முடித்துள்ள பிரதமர் மோடி அவர்கள் தனது அடுத்தகட்ட பிரச்சாரத்தை நாளை தொடங்கவுள்ளார். நாளை இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கும் பிரதமர் மோடி அவர்கள் நாளை மறுநாள் ரோடு ஷோ(Road Show) மூலம் மக்களிடம் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்கவுள்ளார்.

நாளை மறுநாள் பெங்களூருவில் நடைபெற இருக்கும் பிரச்சாரத்தில் 36 கிலோமீட்டர் வரை தொடர்ந்து ரோட் ஷோ மூலம் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்கவுள்ளார். அதாவது தொடர் 36 கிலோமீட்டர் தூரம் வரை திறந்த வெளி வாகனத்தின் மூலம் சென்று பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்கவுள்ளார். இதற்கு முன்னர் குஜராத் தேர்தலில் கூட ரோட் ஷோ திட்டம் மூலமாக பிரதமர் மோடி அவர்கள் வாக்கு சேகரித்தார். அதனால் கர்நாடகத்திலும் பிரதமர் மோடி அவர்கள் ரோட்.ஷோ திட்டத்தை பின்பற்றவுள்ளார்.

கர்நாடகாவில் தேர்தல் நெருங்கும் நிலையில் சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சிவராஜ் குமார் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பாஜக கட்சிக்கு ஆதரவாக நடிகர் கிச்சா சுதீப் அவர்கள் வாக்கு சேகரித்தார்.