தடுமாற்றத்துடன் தரையிறங்கிய விமானம் – தாறுமாறான மோதல்!

0
273

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் தடுமாற்றத்துடன் தரையிறங்கியுள்ளது. அப்போது அங்கு வந்து கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது.

விமானத் துறை அதிகாரிகளிடம் இதனை விசாரித்த போது, விமானத்தில் இயந்திர பழுது நேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். வானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது இடையில் இயந்திர பழுது ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் பின்னர் விமானி விரைவாக செயல்பட்டு உடனடியாக விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முயற்ச்சித்துள்ளார். மேலும் விமானம் வேகமாக நெடுஞ்சாலையில் திடீரென்று தரையிறக்கப்பட்டது.

இதனால் எதிர்பாராமல் கார் ஒன்று விபத்துக்குள்ளானது. விமானம் மற்றும் கார் இரண்டிற்கும் சிறிதளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மனிதர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது இதில் குறிப்பிடத்தக்கது ஆகும்.

Previous articleஐயோ அம்மா அடிக்காதிங்க! பொதுமக்கள் தந்த தர்ம அடி!
Next articleஅதிமுகவின் விருதுநகரின் முக்கிய புள்ளிக்கு சீட்டு இல்லையா! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்!