வங்கிக்கு செல்ல திட்டமா? பட்டியலை பாருங்க! இந்த மாதத்தில் மட்டும் 15 நாட்கள் விடுமுறை!

Photo of author

By Jeevitha

வங்கிக்கு செல்ல திட்டமா? பட்டியலை பாருங்க! இந்த மாதத்தில் மட்டும் 15 நாட்கள் விடுமுறை!

Jeevitha

Planning to go to the bank? Check out the list! 15 days holiday in this month alone

வங்கிக்கு செல்ல திட்டமா? பட்டியலை பாருங்க! இந்த மாதத்தில் மட்டும் 15 நாட்கள் விடுமுறை!

பெரும்பாலும் இந்திய வங்கிகளுக்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தான் விடுமுறை தினங்கள் என்னென்னவென்று வெளியிடும்.

அவ்வாறு வங்கி ஊழியர்களுக்கு வாரத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை கட்டாயமாக விடுமுறை தினமாகத்தான் இருக்கும்.

இதனைத் தொடர்ந்து இம்மாதத்தில் பண்டிகை நாட்கள், மற்றும் வார இறுதி நாட்கள் சற்று அதிகமாகவே காணப்படுகின்றது. எனவே இம்மாதத்தில் கிட்டத்தட்ட வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை என ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தகவல் அளித்துள்ளனர்.

அக்டோபர் மாதம் 2,12,14,15,21 முதல் 28 தேதி வரை தமிழ்நாடு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் 18 ஆம் தேதி கதி பிஹு, காரணமாக அசாம் வங்கிகளுக்கும்,
19 சம்வத்சரி திருவிழா மற்றும் 31 ஆம் தேதி சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் காரணமாக குஜராத் வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளனர்.