வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய முக்கிய செடிகள் மற்றும் அதன் பயன்கள்

0
409

ஒவ்வொருவரின் வீட்டிலும் ஆன்மீகம் மற்றும் மருத்துவ அடிப்படையில் கட்டாயம் இருக்க வேண்டிய முக்கிய செடிகள் மற்றும் அதன் பயன்கள்

பிரண்டை செடி :
இது முக்கிய வாஸ்து செடிகளில் ஒன்றாகும் மற்றும் பசியின்மையை போக்குவதற்கும் நல்ல மருந்தாகும்.

பிரண்டை செடி

கற்றாழைச்செடி :
இதுவும் வாஸ்து செடிகளில் ஒன்றாகும். சருமத்தை மிருதுவாக்கவும் சில வயிற்றுப் பிரச்னைகளுக்கும் நல்ல மூலிகை மருந்தாக பயன்படுகிறது.

கற்றாழைச்செடி

வெற்றிலைச் செடி :
குழந்தைகள் இருக்கும் வீட்டில் முக்கியமாக இருக்க வேண்டிய செடிகளில் ஒன்றாகும்.குழந்தைகளின் நெஞ்சுசளிக்கு நல்ல இயற்கை மருந்தாகப் பயன்படுகிறது.

வெற்றிலைச் செடி

கற்பூரவள்ளி செடி :
இதுவும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் கட்டாயமாக இருக்க வேண்டிய செடியாகும்.குழந்தைகளின் சாதாரண சளிக்கு இதன் சாறு இயற்கை மருந்தாக பயன்படுகிறது.

கற்பூரவள்ளி செடி

துளசிச்செடி :
அனைவர் வீட்டிலும் மிக கட்டாயமாக இருக்க வேண்டிய செடிகளில் ஒன்றாகும்.தீயசக்திகளை அண்டவிடாமல் தடுக்கவும் பெரியவர்கள் சிறியவர்கள் அனைவர்களின் சளி பிரச்சனையை தீர்க்கவும் பயன்படுகிறது.

துளசிச்செடி

குறிப்பு : இவை அனைத்தும் தொட்டிச் செடிகளாகவும் எளிமையான பராமரிப்பிலும் வளரக்கூடியவை.

Previous articleஒவ்வொரு வயதினரும் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?
Next articleபாயில் படுத்து உறங்குவதால் உடலில் நடக்கும் அதிசயம்!!