பாயில் படுத்து உறங்குவதால் உடலில் நடக்கும் அதிசயம்!!

0
294

இக்காலகட்டத்தில் பிறந்த குழந்தைகள் முதல் பெரியோர் வரை மெத்தையில் படுக்கும் பழக்கத்தை வழக்கமாக கொண்டுள்ளனர். பொதுவாகவே மெத்தை தேங்காய் நார்களினாலும் பஞ்சுகளினாலும் ஆனவையாகும்.இரண்டுமே அதிக சூட்டை உள்வாங்கிக்கொள்ளும்.

இதனால் மெத்தையின் மீது படுத்து உறங்குவர்களுக்கும் உடலின் சூடு வெகுவாக அதிகரிக்கும் இதுமட்டுமின்றி மெத்தையில் படுப்பதுனாலும் தலையணை வைத்து உறங்குவதனாலும் உடல் நலம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இதற்கான தீர்வு நாம் பாயில் படுத்து உறங்குவது ஆகும்.மெத்தையில் உறங்குவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் பாயில் உறங்குவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் இந்த பதிவில் காணலாம்.

மெத்தையில் படுக்கும் போது ஏற்படும் உடல்நல கோளாறுகள்?

மெத்தையில் தலையணை வைத்து படுக்கும் பொழுது கழுத்து எலும்புகள் விரைவில் தேய்மானம் அடைந்து விடுகின்றனர்.

மூளைக்குச் செல்லும் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன.

ரத்த ஓட்டம் மூளைக்கு சீராக செல்வதை தடுக்கிறது.

பாயில் படுத்து உறங்குவதால் ஏற்படும் நன்மைகள்?

பாயில் படுக்கும் போது நம் உடலின் சூட்டை உள்வாங்கி நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்கிறது.

கர்ப்பிணி பெண்கள் பாயில் படுப்பதால் அவர்களின் இடுப்பு எலும்பு விரிவடைந்து சுகப்பிரசவம் ஏற்பட வழி செய்கிறது.

பிறந்த குழந்தைகளை பாயில் படுக்க வைக்கும் பொழுது கழுத்து சுளுக்கு பிடிக்காமல் இருக்க உதவுகிறது.

பிறந்த குழந்தைகளை பாயில் உறங்க வைப்பதால் அதன்
மூதுகு எலும்புகள் நேராகப்பட்டு கூன் விழுவது தவிர்க்கப்படுகிறது.

மூட்டு வலி முதுகு வலி தோள்பட்டை தசைப்பிடிப்பு போன்ற பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு பாயில் படுத்து உறங்கினால் இதிலிருந்து விடுதலை பெறலாம்.

பாயில் படுக்கும் போது ஆண்களின் மார்பக தசை தளர்ந்து விரியும்.

பாயில் படுத்து உறங்கும் பொழுது ரத்த ஓட்டம் சீராக அமையும்.