ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட்டின் விலை உயர்வு! வெளியான அதிரடி உத்தரவு

Photo of author

By Anand

ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட்டின் விலை உயர்வு! வெளியான அதிரடி உத்தரவு

Anand

IRCTC Income-News4 Tamil Latest Business News in Tamil Today

ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட்டின் விலை உயர்வு! வெளியான அதிரடி உத்தரவு

மத்திய ரெயில்வே வழித்தடங்களில் உள்ள ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட்டின் விலையானது தற்காலிகமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

தீபாவளி பண்டிகை விடுமுறை காரணமாக வெளியூரில் வேலை செய்பவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வது வழக்கமானது. அந்த வகையில் ரெயில் மூலம் பயணம் செய்ய வரும் அவர்களை வழியனுப்ப கூட வரும் நபர்கள் அதிக அளவில் ரெயில் நிலையத்தில் கூடுகின்றனர். இதனால் ரெயில் நிலையங்களில் கூட்டம் வழக்கமானதை விட அதிகமாகி அலைமோதுகிறது.

இந்த நிலையில் இதுமாதிரி கூடும் கூட்ட நெரிசலை தவிர்க்க மத்திய ரெயில்வே வழித்தடங்களில் உள்ள ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட்டின் விலையை தற்காலிகமாக உயர்த்தியுள்ளது.இதனால் தேவையில்லாமல் வழியனுப்ப வரும் நபர்கள் பிளாட்பார்மில் கூட்டமாக கூடுவது தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

அந்த வகையில் மும்பை சி.எஸ்.எம்.டி., தாதர் குர்லா டெர்மினஸ், தானே, கல்யாண், பன்வெல் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் இன்று சனிக்கிழமை 22 ஆம் தேதி முதல் வருகிற 31 ஆம் தேதி வரை பிளாட்பாரம் டிக்கெட்டின் விலை ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை மத்திய ரெயில்வே செய்தி தொடர்பாளர் சிவாஜி சுதார் தெரிவித்துள்ளார். வழக்கமாக பிளாட்பாரம் டிக்கெட் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது என்பது  குறிப்பிடத்தக்கது.