Cricket: 3 போட்டிகள் மட்டும் விளையாடிய வீரர்களை தென்னாபிரிக்கா அணியில் இருந்து நீக்கிய பிசிசிஐ.
இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் தொடங்கவுள்ளது இந்த தொடருக்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இந்த அணியில் சூர்யகுமார் யாதவ்(c ), அபிசேக் சர்மா,சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரமன்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், விஜயகுமார் வைசாக், ஆவேஷ் கான் மற்றும் யஷ் தயாள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதில் வேகப்பந்து வீச்சாளர் மயங்க யாதவ் , வேகப்பந்து வீச்சாளர் ஆல் ரவுண்டர் சிவம் துபே மற்றும் ரியான் பராக் ஆகியோர் இடம்பெறவில்லை . இவர்கள் மூவரும் இதற்கு முன் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான டி 20 போட்டிகளில் இடம்பெற்றிருந்தனர். இதில் சிவம் துபே காயம் காரணமாக வங்கதேசத்துக்கு எதிரான கடைசி போட்டியில் இருந்து வெளியேறினர்.
இந்நிலையில் இந்த தென் ஆப்பிரிக்கா தொடரில் என் இடம்பெறவில்லை என்பது குறித்து பிசிசிஐ விளக்கமளித்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர் மயங்க யாதவுக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது, சிவம் துபே வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைய வில்லை.
அதனால் அவருக்கு பதிலாக நிதீஷ் குமார் ரெட்டி இடம்பெறுவர், மேலும் ரியான் பராக் கிற்கு நீண்ட நாட்களாக வலது தோள்பட்டையில் காயம் இருந்து வந்தது அதை சரி படுத்து நோக்கில் பிசிசிஐ சிறப்பு மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார்.இதனால் இவர்கள் மூவரும் அணியில் இடம்பெறவில்லை என தெரிவித்தது.