இன்ப அதிர்ச்சியளித்த எடப்பாடியார்! அதிர்ந்து போன DMK
தேர்தல் நெருங்கும் வேளையில் மக்களை கவர தமிழக முதல்வர் எடப்பாடியார் தொடர்ந்து பல புதிய அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அந்த அறிவிப்புகளில் ஒன்றாக ஊரக வளர்ச்சிதுறையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், துப்புரவு காவலர்கள்,செயலாளர்கள் என அனைவருக்கும் சம்பளம் உயர்வு அளித்துள்ளார்.இந்த அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பணியாளர்கள் இதற்காக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருக்கும் ,முதல்வருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமனி அவர்கள் சென்னையில் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது கூறியதாவது ,ஊரக வளர்ச்சியில் பணி புரியும் 12,524 ஊராட்சி செயலாளர்களுக்கும், ஊராட்சி துறையில் பணியாற்றிவரும் மோட்டார் பம்புகளை இயக்கும் 60 ஆயிரம் பணியாரர்களுக்கும் அவர்களின் அடிப்படை ஊதியமான 2600 லிருந்து 4000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
66 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் மற்றும் துப்புரவு காவலர்களின் கோரிக்கையை ஏற்று ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு என 1 லட்சத்து 54 ஆயிரத்து 524 தூய்மை பணியாளர்களின் குடும்பங்களின் வாழ்வை மேலும் உயர்த்தியதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்களுக்கும் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்ககளின் கூட்டமைப்பு சார்பாக நன்றி தெரிவித்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற சட்ட மன்ற கூட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயக் கடன் நிலுவை தொகையான 12,110கோடி ரூபாயும் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் அறிவித்தார்.இது விவசாயம் செய்யும் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழக முதல்வர் இந்த அறிவிப்புகளின் மூலம் விவசாயிகளின் வாக்குகளைப் கவர நினைக்கிறார். இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு ஆச்சரியத்தையும்,திமுகவிற்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது .ஏனென்றால் திமுகவினர் ஆட்சிக்கு வந்த பிறகு செய்வதாக கூறிய வாக்குறுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இப்போதே நிறைவேற்றியுள்ளார்.
இந்நிலையில் தான் அடுத்த அறிவிப்பாக ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் ,துப்புரவு பணியாளர்கள் மற்றும் துப்புரவு காவலர்களுக்கு சம்பளம் உயர்வும் அளித்துள்ளார். இந்த அறிவிப்பும் திமுகவிற்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.முதல்வர் அறிவித்த இந்த அறிவிப்பும் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. மக்களின் வாக்குகளை கவர அதிமுகவின் இந்த அறிவிப்பால் திமுகவின் தலைமை ஆட்டம் கண்டுள்ளது.