பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் வாழ்ந்து காட்டுவதன் மூலமாக தான் அத்துமீறிய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த இயலும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
அத்துடன் அண்மைக் காலமாக நாம் அதிகமாக கேள்விப்படும் செய்தி இதுதான் இதுபோன்ற செய்திகள் என்னை அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகி கொண்டிருக்கிறது. பெண்கள், குழந்தைகள், மீதான பாலியல் வன்முறைகளும் , அதைத் தொடர்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொள்வதும், தான் இதற்கு காரணம் இது போன்ற செய்திகளைக் கேள்விப்படும் போது அவமானமாக இருக்கிறது என்று முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார் .
அறத்தையும், பண்பாட்டையும், அதிகமாக பேசும் ஒரு சமூகத்தில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும், முன்னேறிய ஒரு நாட்டில் அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்த இந்த காலகட்டத்தில் இப்படியான கேவலமான செயல்களும் நடக்கத்தான் செய்கிறது
இவற்றையெல்லாம் பற்றி பேசாமல் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது விட்ராதிங்க என்று அந்தக் குழந்தைகள் கதறும் குரல் என் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் பகுதிகளில் பொது வெளிகளில், பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சில சம்பவங்கள்தான் வெளியில் தெரிகின்றன மற்றவைகள் அப்படியே மறைக்கப்பட்டு விடுகின்றன என கூறியிருக்கிறார்.
அரை நூற்றாண்டுக்கு முன்னால் ஒரு திரைப்படத்தில் மனசாட்சி உறங்கும் சமயம் பார்த்து தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விட்டது என்று கலைஞர் எழுதியிருந்தார் அப்படி மனசாட்சியற்ற மனிதர்களால் பெண் பிள்ளைகள் பாலியல் சீண்டல்கள் உட்படுத்தப்படும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை நாம் நாகரிகத்தையும், பண்பாட்டையும், பற்றி பேசுவதில் எந்தவிதமான அர்த்தமும் கிடையாது.சக உயிராக பெண்ணைப் பார்க்கும் எண்ணம் தோன்றாத வரையில் இதனை தடுக்க இயலாது என்று தெரிவித்திருக்கிறார்.
உடல் ரீதியாக ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக செய்யப்படும் வெளிப்படையான பாலியல் சீண்டலுக்கு எதிராக எத்தனையோ சட்டங்கள் இருக்கின்றன இந்த சட்டங்களுக்கு முன்னால் நிறுத்தப்பட்டு இத்தகையவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று நான் இந்த சமயத்தில் உறுதியாக கூறுகிறேன் என.
இப்படிப்பட்ட பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதைப் பற்றி வெளிப்படையாக புகார் கூறுவதற்கு முன் வரவேண்டும் பள்ளி ஆசிரியர்களிடம், தலைமை ஆசிரியரிடம், பெற்றோர்களிடம், சக அதிகாரிகளிடம், நிர்வாகத்திடம், புகார்களை வழங்க வேண்டும் அந்த புகாரில் நடவடிக்கை எடுப்பதற்கு அவர்களும் தயங்கக்கூடாது என்று கூறியிருக்கிறார்.
இந்த புகாரை வாங்கினால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று பள்ளி நிர்வாகமும், தன்னுடைய மகளுக்கு நடந்ததை வெளியில் சொன்னால் ஊரார் தவறாகப் பேசுவார்கள் என்று பெற்றோரும் நினைக்கக் கூடாது. அப்படி செய்தால் அது உங்களுடைய பிள்ளைகள் எதிர்காலத்திற்கு செய்யும் மாபெரும் துரோகம் என கூறியிருக்கிறார்.
பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்படும் பெண் உளவியல் ரீதியாக பார்க்கப்படுகிறார் உடல் வலியுடன் சேர்ந்து உள்ளத்தின் ஏற்படுகின்றது. அவமானம் அடைகின்றார் நம்பிக்கை தகர்ந்து போகிறது, சக மனிதர்கள் மீது வெறுப்பு வளர்கின்றது, ஆண்கள் மீது கோபம் அதிகமாகிறது. கல்வியிலும்,வேலையிலும் கவனம் செலுத்த இயலாதவராக ஆகிவிடுகிறார் அந்த பெண்ணின் அனைத்து செயல்பாடுகளுக்கும் இதனால் தடைபட்டு போகின்றது எதிர்காலமே கேள்விக்குறியாகி விடுகிறது.
இதுபோன்ற சரிவுகளில் இருந்து பெண் குலத்தை காக்க வேண்டிய கடமை நாம் எல்லோருக்கும் இருக்கிறது இதை மற்ற பிரச்சனைகளையும் விட மிக முக்கியமான பிரச்சினையாக தமிழக அரசு நினைக்கின்றது. பாலியல் தொல்லைகள் சீண்டல்கள் தொடர்பான புகார் வந்ததும் உடனடியாக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நீங்களே கடந்த சில நாட்களாக அதை செய்தித்தாள்களில் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் உண்மை குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுத்தர இந்த அரசு உறுதியாக இருக்கிறது என கூறியிருக்கிறார்.