விரைவில் தொடங்குகிறது +1 பொதுத்தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்!

0
117

தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த 5ம் தேதி ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து 11 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு எதிர்வரும் 10ஆம் தேதி ஆரம்பமாகி 31ஆம் தேதி வரை நடக்கவிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

ஆகவே முதல் நாளில் மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கவிருக்கின்றன இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8.90 லட்சம் மாணவ, மாணவிகள், எழுதவிருக்கின்றன.

இதில் 5,673 தனித்தேர்வர்கள், 5,299 மாற்றுத்திறனாளிகள், 4 மூன்றாம் பாலினத்தவர்கள், 99 சிறை கைதிகள் உள்ளிட்டோரும் அடங்குவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தனித்தேர்வர்களுக்கும், 115 சிறைக்கைதிகளுக்கு 9 தேர்வு மையங்கள் பிரத்தியேகமாக அமைக்கப்படவிருக்கின்றன. சென்னையில் மட்டும் 167 மையங்களில் 47,121 பேர் எழுதுகிறார்கள்.

இதற்கு நடுவே தேர்வு கண்காணிப்பாளர் பணியில் 47,315 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவிருகிறார்கள். முறைகேடுகளைத் தடுப்பதற்காக 4,291 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

பொதுத்தேர்வு தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க தேர்வு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு காலங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் இந்த அறை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.9498383081, 9498383075 உள்ளிட்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தேர்வுகள் துறை அறிவித்திருக்கிறது.

Previous articleஐபிஎல் கிரிக்கெட் போட்டி! டெல்லியை துவம்சம் செய்த சென்னை அணி!
Next articleதமிழகத்தில் தொடர் மின் தடைக்கு முக்கிய காரணம் இதுதான்! மத்திய இணையமைச்சர் அதிரடி பேட்டி!