தமிழகத்தில் தொடர் மின் தடைக்கு முக்கிய காரணம் இதுதான்! மத்திய இணையமைச்சர் அதிரடி பேட்டி!

0
76

தமிழகத்தில் எப்படியாவது பாஜகவை எழுச்சி பெற செய்ய வேண்டும் என்று அந்த கட்சி கடந்த 2014ஆம் ஆண்டு முதலே தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அந்த கட்சி பாஜகவை தமிழகத்தில் எழுச்சி பெற செய்ய வேண்டும் என முடிவு செய்ததிலிருந்து பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதாவது தமிழகத்தில் கொஞ்சமும் அறிமுகமாகாத ஒரு கட்சியாக பாஜக இருந்தது, இதனை தொடர்ந்து எப்படியாவது இந்த கட்சியை தமிழகத்தில் பிரபலமான கட்சியாக அடையாளப்படுத்த வேண்டும் என அந்தக் கட்சியின் தலைமை முடிவு செய்தது.

இதற்கு பல அதிரடி வியூகங்களை வகுத்தார்கள் அதாவது, அந்த கட்சியை தமிழக மக்களிடம் அடையாளப்படுத்துவதற்கு அதிமுகவை பயன்படுத்திக்கொண்டது அந்த கட்சி. அதேபோல திமுகவை தற்போது வரையில் மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறது.

திமுகவும், சற்றும் சலைக்காமல் பாஜகவை எதிர்த்து வருகிறது.இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பகுதியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் முருகன் தெரிவித்திருப்பதாவது:

2014 ஆம் ஆண்டுக்கு முன்புவரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இலங்கை கடற்படையால் தினந்தோறும் ஒரு மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டார், கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்திருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

அதுவே 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடியின் தலையீடு காரணமாக, ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் கூட நடைபெறவில்லை. அந்த விதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நம்முடைய மீனவர்களுக்கு ஒரு மிகப்பெரிய பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறது என கூறியிருக்கிறார்.

அதோடு 2014ஆம் வருடத்திற்கு பிறகு மின்தடை என்பதே இல்லாமல் இந்தியா மின்மிகை நாடாக மாறியிருக்கிறது. தமிழ்நாட்டில் மின்தடை உண்டாவதற்கு நிர்வாக சீர்கேடுகள் தான் காரணம் என அவர் கூறியிருக்கிறார்.