பிளஸ் டூ வகுப்பு மாணவி அதிர்ச்சி? மாற்றுசான்றிதழ் குளறுபடி பள்ளி அதிகாரிகள் விளக்கம்!.
மதுரை மாவட்டம் மேலூர் அரசு கலைக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.இதில் 2022- 2023 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது.
இவை தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்து வரும் நிலையில் மேலூர் அரசு கல்லூரியில் இளங்கலை, வரலாறு, பொருளியல், வணிகவியல் ,தாவரவியல், கணிதம், இயற்பியல், வேதியல் மற்றும் விலங்கியல் உள்ளிட்ட 798 இடங்களுக்கு மாணவர்கள் 4665 மாணவிகள் 2105 மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 6771 விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார்கள்.
எனவே மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கல்லூரியில் சுறுசுறுப்பாக நடந்து வந்தது.இதனால் கல்லூரியில் கூட்டம் அலைமோதியது.இதில் மேலூர் பகுதியில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி ஒருவர் கல்லூரியில் சேர்வதற்கான கலந்தாய்வில் கலந்து கொண்டார்.
அதன்படி அதற்கான நகல்கள் மற்றும் அவரது சான்றிதழ்களை அதிகாரியிடம் சமர்ப்பித்தார். அப்போது பிளஸ் டூ தேர்ச்சிக்கான அவரது மாற்றுச்சான்றிதழில் முதல் மொழி தமிழ் எனவும் மற்றும் 2ஆவது மொழி அசாமி எனவும் அச்சடிக்கப்பட்டு இருந்தது. இதை கண்ட அந்த மாணவி பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
இது எப்படி சாத்தியம் ஆகும் என அழ ஆரம்பித்து விட்டார்.பின்னர் அங்குள்ள சில அதிகாரிகள் அதனை சோதனை செய்தனர். அந்த மாணவி படித்த பள்ளியில் கணினியில் பதிவு செய்யப்படும் போது இது சரியாக காட்டுகிறது. ஆனால் மாற்றுச்சான்றிதழில் தொழில் நுட்ப பிழையால் அசாமி என தவறாக அச்சாகி இருந்து தான் இதற்கு முழு காரணம் என்றார். அந்த பிழையை உடனடியாக திருத்தம் செய்து விட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.இதனால் அரசு கல்லூரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.