PM-KISAN 11வது தவணையின் உதவித்தொகை! மத்திய அரசு அறிவிப்பு!

Photo of author

By CineDesk

PM-KISAN 11வது தவணையின் உதவித்தொகை! மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியாவில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள பிஎம் கிசான் திட்டத்தில் கீழ் தற்போது 11 – வது தவணைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கும் வகையில் 2018 ஆம் ஆண்டு கிசான் திட்டம் கொண்டு வரப்பட்டது. விவசாயிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த மே 30ஆம் தேதியன்று பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 11 வது தவணை வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ரூபாய் 2,000 வீதம் ஆண்டுதோறும் 3 கட்டமாக மொத்தம் ரூபாய் 6,000 நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது.இதுவரை பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இதுவரை 10 தவணை வரை வழங்கப்பட்டுள்ளது.மேலும் 11 தவணை பெற வேண்டுமெனில் பயனாளிகள் தங்களின் e-KYC விவரங்களை சரிபார்க்க வேண்டும். அதனடிப்படையில் தகுதியானவர்களுக்கு மட்டுமே வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். மேலும் இந்த தவணை தொகையை பெற இ-கேஒய்சி செயல்முறைகளை முழுமையாக முடிக்க வேண்டும். விவசாய பயனாளிகள் ஆன்லைன் மூலம் இந்த வேலையை செய்யலாம்.இதன் மூலம் 10 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். சுமார் 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூபாய். 21,000 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த 11 – வது தவணைத்தொகை சிலருக்கு வரவு கிடக்கவில்லை. உடனடியாக மத்திய வேளாண் அமைச்சகத்தின் புகார் அளிக்கலாம். இதன் மூலம் தகுதி இருந்தும் பணம் கிடைக்காதவர்களுக்கு தொகைக்கு கிடைக்கும்.முதலில் பயனாளர் உங்கள் பகுதியில் உள்ள கணக்காளர் மற்றும் வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும். மேலும் இத்திட்டத்திற்கான ஹெல்ப் – லைன் தொடர்பு கொள்ளலாம். [email protected] என்ற மின்னஞ்சல் அல்லது ஹெல்ப்லைன் எண் 011-23381092, 011—23381092, 23382401, 18001155266 என்கிற எண் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.