Pm-kisan உதவித்தொகை பெறும் விவசாய நீங்கள்! இதோ அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
மத்திய அரசிடமிருந்து விவசாயிகளுக்கு பல நலத்திட்டத்தின் வழியாக மானியம் வழங்கப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா.இந்த திட்டத்தின் கீழ் விவசாயி குடும்பகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது.இந்த தொகையானது நான்கு மாத இடைவெளியில் தலா ரூ.2000வீதம் மூன்று தவனையாக மக்களுக்கு செலுத்தப்படும்.சாகுபடி நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தற்போது வரை 10 தவணை முறையில் பணம் போடப்பட்டுள்ளது. 11வது தவணை இன்றளவும் போடப்படவில்லை.
அந்த பதினோராவது தவணை குறித்து விவசாயிகள் பெருமளவு காத்துக் கொண்டுள்ளனர். எப்பொழுதும் ஏப்ரல் முதல் வாரத்திலேயே இந்த மானியத் தொகை செலுத்தப்படும். ஆனால் ஏப்ரல் மாதம் தொடங்கி தற்போது வரை செலுத்தவில்லை. திடீரென்று இந்த திட்டம் செல்லாது என மோடி கூறி விடுவாரோ என்று மக்கள் பலரும் கூறி வருகின்றனர். ஏனென்றால் இப்பொழுது மோடி அவர்கள் மக்கள் எதிர்பாராத நேரத்தில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிடுவதில் பெயர் போனவரே. ஆகையால் இந்த பிஎம் கிசன் சம்மன் நிதி யோஜன திட்டத்தின் குறித்து ஏதேனும் தகவல் வருமா என்று மக்கள் பெருமளவு காத்துள்ளனர்.
அம்பேத்கர் பிறந்தநாள் தினத்தன்று இந்த தொகை போடப்படும் இன்று பெருமளவு பேசப்பட்டு வந்தது. ஆனால் அம்பேத்கர் பிறந்தநாள் முடிவடைந்துவிட்டது. ஜூலை மாதத்திற்குள் இந்த தொகை போடப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 11வது தவணைக்கு கட்டாயம் கேஒய்சி சரிபார்க்கப்படும் என்று கூறியுள்ளனர். அதில் கேஒய்சி சரி பார்க்கப் படவில்லை என்றால் இந்த பணம் வராமல் கூட போக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளனர். இதில் பத்தாவது தவணை ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.