PM Kisan Yojana: 17வது தவணை.. இதை செய்யாதவர்களுக்கு ரூ.2000 கிடைக்காது!! வெளியானது முக்கிய அறிவிப்பு!!
நாட்டில் உள்ள விவசாயிகளின் நிதித் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசால் பிரதான் மந்திரி கிசான் என்ற திட்டத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கில் ஆண்டுதோறும் ரூ.6,000 மூன்று தவணைகளாக செலுப்படுகிறது.
நேரடி வரவு மூலம் இதுவரை 16வது தவணைகள் செலுத்தியுள்ள மத்திய அரசு 17வது தவணைத் தொகை கடந்த ஜூன் 18 அன்று விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.eKYC முடித்த விவசாயிகளின் வங்கி கணக்கில் மட்டுமே 17வது தவணைத்தொகை வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்ற தேர்தல் முடிந்து 3வது முறை பிரதமராக தேர்வாகி இருக்கும் மோடி அவர்கள் தனது முதல் கையெழுத்தை பிரதான் மந்திரி கிசான் திட்ட கோப்பில் கையெழுத்திட்டார்.இத்திட்டத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதன் மூலம் சுமார் 9.3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என்று சொல்லப்படுகிறது.
இதுவரை eKYC பூர்த்தி செய்யாதவர்கள் மத்திய அரசின் அதிகாரபூர்வ இணையதளமான pmkisan.gov.in மூலம் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
eKYC ஆன்லைன் பூர்த்தி செய்வது எப்படி?
ஸ்டெப் 01:
http://pmkisan.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
ஸ்டெப் 02:
பின்னர் விவசாயிகள் கார்னர் என்பதை க்ளிக் செய்து eKYC-ஐ க்ளிக் செய்யவும்.
ஸ்டெப் 03:
பின்னர் உங்கள் ஆதார் விவரங்களை அப்டேட் செய்யவும்.
ஸ்டெப் 04:
ஆதாரில் உள்ள மொபைல் எண்ணிற்கு OTP வரும்.அதை eKYC-இல் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு eKYC பூர்த்தி செய்தவர்களுக்கு 17வது தவணைத் தொகை அவர்களது வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.