நிறைவு பெற்றது குவாட் உச்சிமாநாடு! டெல்லி திரும்பினார் பிரதமர் நரேந்திர மோடி!

Photo of author

By Sakthi

நிறைவு பெற்றது குவாட் உச்சிமாநாடு! டெல்லி திரும்பினார் பிரதமர் நரேந்திர மோடி!

Sakthi

இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை உறுப்பினராக கொண்டிருக்கும் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் நேற்று நடந்தது. இந்த 4 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்ற 2வது உச்சி மாநாடு இது என சொல்லப்படுகிறது.

இந்த இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பேனீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்டோரும் பங்கேற்றார்கள்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் 2 நாள் ஜப்பான் பயணம் முடிவடைந்தது. இதனை எதிர்த்து அவர் தனி விமானம் மூலமாக நேற்றிரவு டெல்லி புறப்பட்டார்.

இந்த சூழ்நிலையில், ஜப்பானில் மாநாட்டை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலமாக இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தார்.