4 மாநிலங்களில் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம்! அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது!!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சத்தீஸ்கர், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களிலும் சூறாவளி சுற்றபனுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் சத்தீஸ்கர், தெலுங்கானா, ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களிலும் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உத்திரப்பிரதேசம் உள்பட 4 மிநிலங்களிலும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரும் ஜூலை 7, 8 ஆகிய தேதிகளில் ராஜஸ்தான், தெலுங்கானா, உத்திரப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் இந்த சுற்றுப்பயணத்தின் பொழுது நான்கு மாநிலங்களிலும் சேர்த்து சுமார் 50000 கோடி ரூபாய் மதிப்பிலான 50 நலத்திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜூலை 7ம் தேதி காலை டெல்லியில் இருந்து சத்திஸ்கர் தலைநகரான ராய்ப்பூர்க்கு சென்று ராய்ப்பூர் – விசாகப்பட்டினம் இடையேயான ஆறு வழி சாலைத்திட்டம் உள்பட பல நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார். மேலும் முடிவுபெற்ற பல நலத்திட்டங்களை நாட்டு மக்களுக்காக வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சிகளுக்கு பின்னர் ராய்ப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டதில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.
பின்னர் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து புறப்பட்டு உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூர்க்கு செல்லும் பிரதமர் மோடி அவர்கள் கோரக்பூரில் நடைபெறும் கீதா பத்திரிக்கையின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளவுள்ளார். மேலும் அங்கு மூன்று வந்தே பாரத் இரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கோரக்பூர் இரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணிக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.
இதற்கு பிறகு தனது சொந்த தொகுதி வாரணாசிக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வாரணாசி – ஜாண்பூர் நான்கு வழிப் பாதையை திறந்து வைக்கவுள்ளார். மேலும் பண்டிட் தீன் தயாள் உபாத்பாய் சந்திப்பு முதல் சோன் நகர் வரையில் இருக்கும் புதிய சரக்கு வழிதடத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைக்கிறார். மேலும் மணிக்கர்ணிகா காட், ஹரிச்சந்திரா காட் ஆகியவற்றை புதுப்பிக்கவும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டவுள்ளார்.
பின்னர் வாரணாசியில் இருந்து தெலுங்கானா மாநிலத்தின் வாராங்கல் நகருக்கு ஜூலை 8ம் தேதி புறப்படும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாக்பூர் – விஜயவாடா சாலைத் திட்டத்திற்கும் மேலும் பல முக்கிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டவுள்ளார். மேலும் கரீம் நகர் மற்றும் வாராங்கல் நகருக்கு இடையேயான நான்குவழிச் சாலை திட்டத்திற்கான அடிக்கல்லையும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டவுள்ளார். பின்னர் வாராங்கல்லில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதமர் அங்கிருந்து ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் நகருக்கு செல்கிறார்.
பிகானேர் நகரில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிகானேர் இரயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்யும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். அமிர்தசரஸின் ஜாம்நகர் விரைவுசாலையின் பல பிரிவுகளை நாட்டு மக்களுக்காக தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி அவர்கள் பிகானேரில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றி தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொள்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.