அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று இந்தியாவுக்கு வருகை தந்ததை அடுத்து குஜராத்தில் சபர்மதி ஆசிரமம் மற்றும் நமஸ்தே டிரம்ப் ஆகிய நிகழ்ச்சிகளில் டிரம்புடன் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக வெளிவந்த செய்தியை அறிந்து உடனடியாக அவர் டிரம்ப் நிகழ்ச்சியை பாதியில் முடித்து விட்டு அவசர அவசரமாக டெல்லி திரும்பி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் இன்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென அந்த பகுதியில் இருந்த வாகனங்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் முதலில் கண்ணீர் புகை குண்டுவீசி வீசியும், அதன் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிகிறது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றதாகவும், அந்த இடமே ஒரே கலவர பூமியாக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து கேள்விப்பட்ட உடன் அகமதாபாத்திலிருந்து உடனடியாக பிரதமர் மோடி டெல்லி திரும்பியுள்ளார். அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் துப்பாக்கி சூடு நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது