மின்னலென பரவும் நோய்த்தொற்று பரவல்! அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி இன்று அவசர ஆலோசனை!

Photo of author

By Sakthi

மின்னலென பரவும் நோய்த்தொற்று பரவல்! அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி இன்று அவசர ஆலோசனை!

Sakthi

நாட்டில் நோய்த்தொற்று பரவல் மீண்டும் மிகத் தீவிரமாக அதிகரித்து வருகிறது, நோய்த்தொற்று பரவல் நாள்தோறும் அதிகரித்து வருகின்றது இதனை தொடர்ந்து நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன.

இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடன் காணொளி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்த இருக்கின்றார் மாலை 4 .30 மணி அளவில் நடைபெறும் இந்த ஆலோசனையின் போது தடுப்பூசி செலுத்தும் வேகம், நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு நடவடிக்கைகள், போன்ற பல்வேறு விவகாரம் தொடர்பாக விவாதிக்க படலாம் என்று தகவல்கள் கிடைத்திருக்கின்றன.