ஜப்பான் பார ஒலிம்பிக் போட்டி! சாதனை படைத்த பவீனா படேல்!

Photo of author

By Sakthi

ஜப்பான் பார ஒலிம்பிக் போட்டி! சாதனை படைத்த பவீனா படேல்!

Sakthi

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இன்று காலை நடந்த மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேல் தோல்வியை சந்தித்து இருக்கிறார். சீன வீராங்கனை இடம் ௩-0 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார் பவீனா படேல்.
இதன் மூலமாக அவருக்கு வெள்ளிப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை பவினா படேல் என்ற பெருமையையும் அவர் பெற்றிருக்கிறார். இந்தியாவிற்குள் முதல் பதக்கத்தை நீங்க பெருவிரல் முதல் வெள்ளி பதக்கம் வெல்லும் வரலாற்று சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இந்த சூழ்நிலையில், இந்த போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இருக்கின்ற அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதில் பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய விளையாட்டு வீராங்கனை 16 அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுடைய வெற்றி எங்களுக்கு மேலும் பெருமை சேர்த்திருக்கிறது. உங்கள் அசாதாரண உறுதியடையும் திறமையையும் இந்தியாவிற்கு அர்ப்பணித்து விளையாடியதால் அது பெருமை சேர்த்திருக்கிறது. இந்த அசாதாரண சாதனைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என கூறியிருக்கின்றார் ராம்நாத் கோவிந்த்.

அதேபோல பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட இருக்கின்ற ஒரு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடத்தக்க வரலாற்றை பவினா எழுதியிருக்கிறார். அவரை ஒரு வரலாற்று வெள்ளிப் பதக்கத்தை நம்முடைய தேசத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். அதற்காக அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அவருடைய வாழ்க்கை பயணம் எல்லோருக்கும் ஊக்கமளித்து வருகிறது அதோடு இளைஞர்களை விளையாட்டுக்களை நோக்கி ஈர்க்கும் விதத்தில் அவருடைய வெற்றி இருக்கிறது என கூறியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.