பிரதமர் மோடியின் சகோதரர் உடல்நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் அனுமதி!

Photo of author

By Parthipan K

பிரதமர் மோடியின் சகோதரர் உடல்நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் அனுமதி!

Parthipan K

Updated on:

பிரதமர் மோடியின் சகோதரர் உடல்நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் அனுமதி!

பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் மோடி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் சகோதரரான பிரகலாத் தாமோதரதாஸ் மோடி கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை உள்ளிட்ட கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக குடும்பத்தினருடன் தமிழத்திற்கு அவர் வருகை தந்துள்ளார். தற்போது சென்னையில் ஓய்வு எடுத்து வரும் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக பிரச்சனை காரணமாக, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சீச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், சிகிச்சை முடிந்த பிறகு டிஸ்டார்ஜ் செய்யப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.