சென்னையில் மாற்றப்பட்ட போக்குவரத்து! காரணம் என்ன தெரியுமா!

Photo of author

By Sakthi

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர வருகின்ற நிலையில், சென்னையில் நாளை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 14 ஆம் தேதி அதாவது நாளை தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் நாளை காலை 11 மணி அளவில் பல திட்டங்களுக்கு சென்னையில் அடிக்கல் நாட்ட இருக்கின்றார் .பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

நாளை காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரையில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் சென்னையில் பெரு நகர எல்லைக்குள் வர அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கோயம்பேடு பகுதியில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வரையில் வரும் வாகனங்கள் நாயர் பாலத்தின் மூலமாக பாண்டியன் ரவுண்டானா சித்ரா பாயிண்ட் வழியாக அண்ணா சாலையில் சென்று அவர்களுடைய இலக்கை அடைந்து கொள்ளலாம்.

ராயபுரத்தில் இருந்து பாரிமுனை வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் இப்ராகிம் சாலை சந்திப்பு பேசின்பிரிட்ஜ் எருக்கஞ்சேரி அம்பேத்கர் சாலை, புரசைவாக்கம் வழியே தங்களுடைய இலக்கை அடையலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அண்ணா சாலையில் இருந்து ராயபுரம் வழியாக வரும் வாகனங்கள் பின்னி ரோடு ஹாஸ்டல் ரோடு நாயர் பாலம் வழியாக தங்களுடைய விளக்கத்தை சென்று அடையலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

சவுதி நால் ரோட்டில் இருந்து காந்தி சிலை வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் கச்சேரி சாலை சந்திப்பு ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக சென்று தங்களுடைய இலக்கை அடையலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.