முதலமைச்சர் எடப்பாடியுடன் பாமக வழக்கறிஞர் கே பாலு சந்திப்பு! சட்ட அமைச்சர் சிவி சண்முகமும் வாழ்த்து

0
128

முதலமைச்சர் எடப்பாடியுடன் பாமக வழக்கறிஞர் கே பாலு சந்திப்பு! சட்ட அமைச்சர் சிவி சண்முகமும் வாழ்த்து

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பதவிக்கான தேர்தலில் வழக்கறிஞர்
பி.எஸ்.அமல்ராஜ் வெற்றி பெற்றார். துணைத் தலைவராக வி.கார்த்திகேயனும், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினராக எஸ்.பிரபாகரனும் வெற்றி பெற்றனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு 25 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த ஆண்டு மார்ச் 28-ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 198 வழக்கறிஞர்கள் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் போட்டியிட்ட பி.எஸ்.அமல்ராஜ், ஆர்.சி.பால்கனகராஜ், எஸ்.பிரபாகரன், ஆர்.விடுதலை, பாமக கே.பாலு, ஜி.மோகனகிருஷ்ணன், வி.கார்த்திகேயன், எம்.வேல்முருகன், டி.செல்வம், ஆர்.சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட 25 பேர் பார் கவுன்சில் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் வெற்றி பெற்ற பார்கவுன்சில் உறுப்பினர்கள் அனைவரும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர், சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகமும் உடனிருந்தார். பாமக சமூக நீதி பேரவையின் தலைவர் வழக்கறிஞர் கே.பாலு அவர்களும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவோடு பார்கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleமெஸ்ஸி ஹாட்ரிக் கோல் சாதனை!
Next articleஇந்தியாவின் வளர்ச்சி 5 சதவீதத்தை தாண்டுவதே கடினம்: பிரபல ஆய்வு நிறுவனம் அறிவிப்பு