அரக்கோணத்தில் வன்னியர்களுக்கு எதிராக சாதிக் கலவரத்தை தூண்டும் விசிக! திருமா முகத்திரையை கிழிக்கும் பாமக பிரமுகர்

0
230
VCK Thirumavalavan
VCK Thirumavalavan

அரக்கோணத்தில் வன்னியர்களுக்கு எதிராக சாதிக் கலவரத்தை தூண்டும் விசிக! திருமா முகத்திரையை கிழிக்கும் பாமக பிரமுகர்

அரக்கோணத்தில் இரு தரப்பினர் குடி போதையில் சண்டையிட்ட சம்பவத்தை சாதி பிரச்சனையாக உருவாக்கி வன்னியர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் விசிகவின் கடந்தகால வரலாறு இதுதான் என திருமாவளவனின் முகத்திரையை கிழிக்கும் வகையில் பாமக பிரமுகர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பாட்டாளி ஊடக பேரவையை சேர்ந்த அருள் ரத்தினம் அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.

விழுப்புரம், சிதம்பரம், முகையூர், அரக்கோணம் நிகழ்வுகளில் வன்னியர் சாதி அபாண்டமாக பழிசுமத்தப்படுகிறது.

1: விழுப்புரம் நவீனா: கொலை செய்யப்பட்டது வன்னியர். பழியும் வன்னியர் மீது.

2: பரதூர் பரமேஸ்வரி: கொலை செய்யப்பட்டதும், கொலை செய்ததும் பட்டியலினத்தவர். ஆனால், பழி மட்டும் வன்னியர் மீது.

3: வெள்ளம்புத்தூர் ஆராயி: கொலைசெய்தவர் வன்னியர் அல்ல. ஆனால், பழி வன்னியர் மீது.

4: குடிபோதை தகராறில் கொலை. பழி பாமக மீது.

நிகழ்வு 1- விழுப்புரம் நவீனா:

29.7.2016 அன்று விழுப்புரத்தில் பள்ளி செல்லும் மாணவி நவீனா, கயவன் செந்திலால் உயிரோடு எரித்து படுகொலை செய்யப்பட்டார்.

அந்த அயோக்கியன் ஒரு சாதி ஒழிப்பு காதல் போராளி எனக் குறிப்பிட்டு, 10.7.2015 ஆம் நாளன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சம்பவத்தின் பின்னணி:

விழுப்புரம் நகரில் பள்ளி செல்லும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் 2012 ஆம் ஆண்டில் இரண்டாண்டு சிறைத்தண்டனை அடைந்தவன் ‘காதல் போராளி’ செந்தில். இந்த சமூக விரோதி, 2015 ஆம் ஆண்டில், குடிபோதையில் இரயிலில் விழுந்து, கை, கால் துண்டிக்கப்பட்டான்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இவனை போராளியாக ஆக்கி – வன்கொடுமை சட்டத்தின் கீழ் பணம் பறிக்க திட்டமிட்டனர். “பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது வன்னியர் பெண்ணை 32 வயது தலித் செந்தில் காதலித்ததால் அவரின் வலது கை, கால் தூண்டிக்கப்பட்டதாக” அப்பாவி நவீனா குடும்பத்தினர் மீது, 3.7.2015 ஆம் நாளன்று பொய்யாக புகார் செய்ய வைத்தனர்.

மறுநாளே, புதிய தலைமுறை தொலைக்காட்சி இதை வைத்து ஒரு விவாதம் நடத்தியது. இதில் கொலையாளி செந்தில் நேரடியாக பங்கேற்றான். திமுக ஆதரவாளரான சுப.வீரபாண்டியன் காமக்கொடூரன் செந்திலுக்கு வக்காலத்து வாங்கினார்.

அந்த அயோக்கியன் ஒரு சாதி ஒழிப்பு காதல் போராளி எனக் குறிப்பிட்டு, 10.7.2015 ஆம் நாளன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அந்த நம்பவம் நடந்து ஓராண்டு ஆவதற்குள் – 29.7.2016 ஆம் நாளன்று வீட்டில் தனது தம்பியுடன் நவீனா இருந்த போது, வீட்டிற்குள் நுழைந்த செந்தில், குழந்தை நவீனாவை ஒரேயடியாக தீவைத்து கொளுத்தி படுகொலை செய்தான்.

நிகழ்வு 2 – பரதூர் பரமேஸ்வரி:

சிதம்பரம் அருகே பரதூர் கிராமத்தில் 1.4.2018 அன்று பட்டியலின சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.

கொலையான சிறுமியின் தாயாரிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியுனரும் – இந்தக் கொலைக்கு வன்னியர்கள்தான் காரணம் என குற்றம் சாட்டினால், SC/ST வன்கொடுமை சட்டத்தின் படி 4 லட்சம் ரூபாய் பணம், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, 2 ஏக்கர் நிலம் கிடைக்கும் என ஆசை காட்டி அதற்கு ஒப்புக்கொள்ள வைத்தனர்.

விசிகவினர் வன்னிய இளைஞர் ஒருவரை கட்டிவைத்து கொளுத்த முயன்றனர். உடையார் ஒருவரின் வைக்கோல் போரை கொளுத்தினர். 18.4.2018 அன்று வன்னியர்களை கைது செய்யக் கோரி சிதம்பரத்தில் போராட்டம் நடத்தினர்.

ஆனால், உண்மைக் கொலைகாரன் மணிகண்டன் எனும் பட்டியலின வாலிபர் கைது செய்யப்பட்டார். 4 லட்சம் ரூபாய் பணம், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, 2 ஏக்கர் நிலம் கொடுப்பது கடைசி நிமிடத்தில் தடுக்கப்பட்டது.

(வன்னியர்களை கைது செய்ய வேண்டும் என்று ஏற்கனவே விசிக நடத்திய போராட்டத்தில் கொலைகாரன் மணிகண்டனும் பங்கேற்று வன்னியர்களை கைது செய்யக் கோரி போராட்டம் நடத்தினான் என்பது குறிப்பிடத்தக்கது.)

நிகழ்வு 3 – வெள்ளம்புத்தூர் ஆராயி:

2018 பிப்ரவரி 21 அன்று, விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூர் கிராமத்தில் ஆராயி என்ற பெண்ணும், அவரது மகளும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதுடன், ஆராயியின் மகன் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டான்.

“இந்தக் கொடுரமான வன்முறை வெறியாட்டத்தை செய்தது இராஜேந்திரன் என்கிற வன்னியர் தான். அவருக்கும் ஆராயி குடும்பத்துக்கும் இடையில் நிலப்பிரச்சினை இருந்தது” என்று ‘நீதியரசர்’ விசிக திருமாவளவன் தீர்ப்பளித்தார். வன்னியர்களை கைது செய்ய வேண்டும் என்று விசிகவினர் போராட்டமும் செய்தனர்

போலீஸ் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டம், புவனகிரியைச் சேர்ந்த தில்லைநாதன் என்பவன், நகைக்காகத்தான் பெண்களைத் தாக்கியதாகவும் அதை வெளியில் சொல்லாமல் இருப்பதற்காகவுமே அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரியவந்தது.

26.3.2018 அன்று தில்லைநாதனை கைது செய்தனர். அவன் மீது 81 குற்ற வழக்குகள் இருந்தன. (தில்லைநாதன் வன்னியர் அல்ல).

நிகழ்வு 4 – அரக்கோணம்

மேற்கண்ட விழுப்புரம், சிதம்பரம், வெள்ளம்புதூர் நிகவுகள் போலவே, அரக்கோணத்திலும் ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறது விசிக + திமுக கும்பல். அதற்காக ஒரு போராட்டத்தை அறிவித்துள்ளது விசிக. அந்த போராட்டத்துக்கு ஆதரவளிக்கிறது திமுக.

அரக்கோணத்தில் குடிபோதையில் நடந்த இரட்டைக் கொலையை, திட்டமிட்டு மாபெரும் சாதிக் கலவரமாக மாற்றிக் கொண்டிருக்கிறது இந்த கோயபல்ஸ் கும்பல் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleதொடங்கிய ஐபிஎல் திருவிழா! MI மும்பை இந்தியன்ஸ் vs  RCB  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்! வெள்ளப்போவது யார்?
Next articleபொதுச்செயலாளர் வழக்கு! சசிகலாவுக்கு கிடுக்குப்பிடி போட்ட நீதிமன்றம்!