ஆக்சிஜன் விவகாரம்! தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த ராமதாஸ்!

Photo of author

By Sakthi

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று வெளியிட்டிருக்கும் சமூக வலைதள பதிவில் தமிழகத்தில் இருக்கின்ற சில பிரபலமான தனியார் மருத்துவமனைகள் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை என்பதை எழுதி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பதாகவும், இது தொடரக்கூடாது என்று நம்புவதும் தெரிவித்திருக்கிறார்.


தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் எதிலுமே ஆக்சிஜன் கட்டுப்பாடு இல்லை என்ற நிலை ஏற்படவேண்டும். தட்டுப்பாடு காரணமாக, ஒரு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் கூட இறக்கவில்லை என்பதுதான் பெருமிதம் அளிக்கும் விஷயமாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுப்பதாக சொல்லியிருக்கும் தினசரி 419 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இப்போது இருந்தே பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஆக்சிஜன் உற்பத்திக்கான சாத்திய கூறுகள் தொடர்பாக ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.