பாமக அப்பா மகன் மோதல்.. பாஜக தான் முக்கிய காரணம்- பளீச் பதிலளித்த நயினார்!!

0
8
PMK father son conflict..BJP is the main reason- Nayanar replied clearly!!
PMK father son conflict..BJP is the main reason- Nayanar replied clearly!!

BJP PMK: அதிமுகவானது இந்த முறை கட்டாயம் ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்ற தீர்மானத்தில் உள்ளது. மற்றொரு பக்கம் பத்தாண்டு ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதில் திமுக மும்முரம் காட்டி வருகிறது. இதன் மத்தியில் பெரும் அழுத்தத்தை திமுக கொடுப்பதால் இம்முறை தங்களுக்கு ஆதரவாக அதிமுக தான் வரவேண்டும் என்று பாஜக நினைக்கிறது. இதனால் இவர்களின் கூட்டணியை ஏப்ரல் மாதம் தமிழகத்திற்கு வருகை புரிந்து அமித்ஷா உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து உடனடியாக தனது கூட்டணி கட்சியான பாமக கட்சிக்குள்ளையே மோதிக் கொள்கின்றனர்.

அதிமுகவும் அதே நிலையில் இருப்பதால் வாக்கு சதவீதத்தில் வேறுபாடு உள்ளது. அதேபோல பாமகவும் இருந்தால் கூட்டணி வைத்தும் இவர்களுக்கு பயனளிக்காது. இதனை சரி செய்ய ஆடிட்டர் குருமூர்த்தி நேற்று ராமதாசை காண தைலாபுரத்திற்கு சென்றிருந்தார். ஆனால் அவர் நான் எனது சிநேகிதனை தான் சந்தித்தேன், பாஜக என்னை அனுப்பவில்லை என்றவாறு தெரிவித்தார். அதுமட்டுமின்றி அன்புமணி வந்தது எனக்கு தெரியவே தெரியாது எனவும் கூறினார். ஆனால் இதெல்லாம் முற்றிலும் பொய் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர்.

உட்கட்சி மோதலை சரி செய்ய தான் ஆடிட்டர் குருமூர்த்தியை பாஜக அனுப்பி வைத்துள்ளது. ஏனென்றால் இம்மாதம் எட்டாம் தேதி மதுரைக்கு அமித் ஷா வரவுள்ளார். மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவும் உள்ளார். இவர் வருகைக்குள் பாமகவின் உட்கட்சி மோதலை சரி செய்து விட வேண்டும் என்ற   நோக்கத்தில் குருமூர்த்தியை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இது ரீதியாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பிய போது, அமித்ஷா மதுரைக்கு வரும்போது அவரை அன்புமணி சந்திப்பது குறித்து எதுவும் திட்டமிட படவில்லை. அதேபோல பாமகவின் உட்கட்சி மோதலுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என தெரிவித்துள்ளார்.

Previous articleவிஜய்யுடன் பாமக என்ட்ரி.. யாரும் எதிற்பாரா டிவிஸ்ட்!! பாஜக – வுக்கு அன்புமணி வைக்கப்போகும் ஆப்பு!!
Next articleஉலகையே திரும்பி பார்க்க வைக்கும் அசத்தல் கன்டுபிடிப்பு!! நீரில் போட்டால் கரையும் பிளாஸ்டிக்!!